செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, என்னுடைய ஒரே நோக்கம் பாரதிய ஜனதா கட்சி வலிமை அடைய வேண்டும் என்பது மட்டும் தான் என்னுடைய நோக்கமாக இருக்கிறது.  தலைவர்களுடைய நோக்கமாக இருக்கிறது. தொண்டர்களுடைய நோக்கமாக இருக்கிறது. 2024 என்பது பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கான தேர்தல்.  நரேந்திர மோடி அவர்கள் வரவேண்டும் என்பதற்கான தேர்தல். 2024இல் தமிழகத்தில் 39க்கு 39 39 என நரேந்திர மோடி ஐயா உடைய பக்கம் வரும்.

அதிமுக சொல்லியிருக்கக்கூடிய காரணம் நீங்க அந்த கட்சியை விமர்சனம் பண்றீங்க. அந்த கட்சியின் தலைவர்களை சிறுமைப்படுத்துறீங்க என சொல்லி கூட்டணியை உடைத்து இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை,

என் மேல இவங்க மட்டும் குற்றம் சாட்டு சொல்லல. தமிழகத்தில் பல கட்சிகள் என் மேல பல குற்றச்சாட்டுகள் சொல்றாங்க. அதுக்கெல்லாம் பதில் அளித்துக் கொண்டிருந்தால் சரியா இருக்காது. என்னுடைய வேலையை நான் செய்து கொண்டிருக்கின்றேன். எந்த பாதையில் நான் செல்ல வேண்டும் என்பதில் தெளிவா இருக்கேன்.

எந்த பாதையில் பாரதிய ஜனதா கட்சி செல்ல வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறேன். குற்றசாட்டுக்கள், அவதூறுகள் நம் மீது தொடர்ந்து சொல்லிட்டு இருக்காங்க. எப்போதும் இதை நான் பொறுப்படுத்ததில்லை. அதற்கான பதிலையும்  சொன்னதில்ல. அதனால் இதற்கும் நான் பதில் சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.