
தமிழ் சினிமாவின் உச்சநச்சத்திரமான தல அஜித் நடிப்பிப் மிக பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் “துணிவு”. இந்த படம் உலகம் முழுவதும் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது. இதையடுத்து இந்த படம் உலகம் முழுவதும் பிப்,.9 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. அதில் வெளிவந்ததில் இருந்து படத்தை பல்வேறு நாடுகளில் பார்த்து ரசித்து வருகின்றனர். இந்நிலையில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், நெட்பிளிக்ஸில் வெளியாகிய துணிவு படம் இந்திய அளவில் டாப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

எனினும் இப்போது உலக அளவில் non-English பிரிவில் முதல் 3-வது துணிவு இடம்பெற்று இருக்கிறது. அதோடு 4வது இடத்தில் துணிவு இந்தி பதிப்பும் பட்டியலில் உள்ளது. அதன்படி நடப்பு வாரத்தில் தமிழில் 40 லட்சத்து 50 ஆயிரம் மணி நேரமும், இந்தியில் 37 லட்சத்து 30 ஆயிரம் மணிநேரமும் துணிவு படம் பார்க்கப்பட்டு இருப்பதாக தரவுகளோடு வெளியிட்டு இருக்கிறது தயாரிப்பு நிர்வாகம்.
#Thunivu is also on TOP 10 on Netflix across 13 countries globally – India, Bahrain, Bangladesh, Malaysia, Maldives, Mauritius, Nigeria, Oman, Pakistan, Qatar, Singapore, Sri Lanka and United Arab Emirates.
— Zee Studios South (@zeestudiossouth) February 15, 2023