
பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் மிகவும் மலிவான விலையில் நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கும் திட்டம் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் தொடங்க உள்ளது.
இந்த திட்டத்தை சோதனை ரீதியாக முதலில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருள்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனை ஜூலை 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.