இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடக்கும் விழாவில் முதலமைச்சர் பேசினார். அதில், எல்லாருக்கும் எல்லாம் என்ற ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. கோயில்களில் நமது கலைகளின் சின்னங்களாக, பண்பாட்டு சின்னங்களாக  இருக்கின்றன. நமது சிற்பகலைகளின் சாட்சிகளாக இருக்கின்றன. நம்முடைய கலை,  திறமைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே கண்ணும் கருத்துமாக அதை காப்பது நம்முடைய அரசினுடைய கடமை என்று எண்ணி இன்றைக்கு செயலாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

அத்தகைய கோயில்கள்  சமத்துவம் நிலவும் இடங்களாக அமைய வேண்டும் என்று முழு கவனத்தோடு செயலாற்றிக் கொண்டிருக்கின்றோம். எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்க கூடாது. அதற்குத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நாம் கொண்டு வந்தோம். அன்னை தமிழ் மொழி ஆலயங்களில் ஒலிக்க வேண்டும் என்ற உத்தரவையும் போட்டு இருக்கிறோம்.

சமூக சமத்துவம் இடங்களாக ஆலயங்கள் இருக்க வேண்டும். மனிதர்களை மட்டுமல்ல… கோவில்களிலும் நகர கோயில்கள். கிராம கோவில் என்றும், பணக்கார கோயில், ஏழை கோவில் என்றும் வேறுபடுத்தி சொல்லப்படுகிறது. கிராமப்புற கோயில்களாக இருந்தாலும், அதை ஏழ்மையான கோவிலாக இருந்தாலும்…   ஆதிதிராவிடர் கோவில் இருக்கக்கூடிய கோவிலாக இருந்தாலும் அனைத்தையும் ஒன்று போல கருதி உதவி செய்யக்கூடிய அரசு தான் நம்முடைய திராவிட மாடல் அரசு.

மதம், சாதி, வேற்றுமை மட்டுமல்ல, கோவில் – சாமி வேற்றுமையும் இந்த அரசுக்கு இல்லை. அனைத்து இறை தளங்களையும் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறோம். அதனால் தான் இந்த மேடையிலே அமர்ந்திருக்கக்கூடிய சமய சான்றோர் மட்டுமல்ல,  இன்னும் பலரும் இந்த அரசை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே உங்களுடைய பாராட்டுக்களும் எங்களுக்கு தேவை. நீங்கள் தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்.

இன்றைக்கு நம்மை ஏளனம் செய்து கொண்டிருக்கக்கூடிய…  விமர்சனம் செய்து கொண்டிருக்கிறவர்களுக்கெல்லாம் இந்த நிகழ்ச்சியே  இந்த மேடையை சாட்சி,  சான்று. எனவே நாங்கள் என்னாலும் உழைப்போம்,  எப்போதும் தொடர்ந்து உழைப்போம், எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலை வருகிற வரையில் இந்த திராவிட மாடல் அரசு உழைக்கும் உழைக்கும் என்ற உறுதியை சொல்கின்றேன் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.