தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். அதன் பிறகு துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் ஜனவரி 11-ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், துணிவு திரைப்படத்திலிருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா போன்ற பாடல்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் டிரைலர் வீடியோ அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தமிழகத்தில் யார் நம்பர் 2 நடிகர் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் எனக்கு இந்த நம்பர்களில் நம்பிக்கை இல்லை என்றும், படத்தின் கதை தான் நம்பர் 1 என்றும் கூறினார்.

அதன் பிறகு சமீபத்தில் வெளியான லவ் டுடே திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இதனால் லவ் டுடே திரைப்படம் தான் உண்மையான நம்பர் ஒன் என்று கூறினார். மேலும் தயாரிப்பாளர் தில் ராஜு தமிழகத்தின் நம்பர் 1 நடிகர் விஜய் தான் என்று கூறிய நிலையில் தற்போது துணிவு தயாரிப்பாளர் லவ் டுடே திரைப்படம் தான் நம்பர் 1 என்று கூறியது கவனத்தைப் பெற்றுள்ளது. இதேபோன்று தயாரிப்பாளர் கே. ராஜனும் லவ் டுடே திரைப்படம் தான் நம்பர் 1 திரைப்படம் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.