மருத்துவ படிப்புகளுக்காக நெக்ஸ்ட் என்ற தேசிய மருத்துவ தகுதி தேர்வு தேசிய மருத்துவ ஆணையம் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதி தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து நெக்ஸ்ட் தேர்வு நடத்த தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு மாணவர்கள் நெக்ஸ்ட் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு தான் பயிற்சி டாக்டராக பணியாற்ற முடியும். அதனைப் போலவே நெக்ஸ்ட் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் முதல் நிலை மருத்துவர் படிப்பில் சேர முடியும்.

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்களுக்கும் இந்த தேர்வு கட்டாயமாக பட்டு உள்ளது. இந்நிலையில் நெக்ஸ்ட் தேர்வு குறித்து விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. எம்பிபிஎஸ் முடித்தவர்கள் மருத்துவராக பணியாற்றமும் வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற இந்தியாவில் பணியாற்றவும் நெக்ஸ்ட் பொது தேர்வு அடுத்த ஆண்டு முதல் நடத்தப்படும் என சுகாதார அமைச்சகம் ஏற்கனவே அறிவித்த நிலையில் இந்த தேர்வுக்கான விதிமுறைகள் குறித்து தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.