தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகள் மூலம் ஏராளமான மக்கள் பயன்பெற்று வரும் நிலையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதில் பல்வேறு விதமான சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். இதன் காரணமாக இவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் தற்போது புதிதாக எஸ்எம்எஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நீங்கள் ரேஷன் கார்டில் கொடுத்துள்ள செல்போன் நம்பரில் இருந்து PDS 102 எனக் குறிப்பிட்டு 9773904050 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் அன்றைய தினம் நியாய விலை கடைகள் திறந்து இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம். இதேபோன்று PDS 101 எனக் குறிப்பிட்டு 9773904050 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்பினால் ரேஷன் கடைகளில் என்னென்ன பொருட்கள் இருப்பு இருக்கிறது என்ற விவரத்தை தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் ரேஷன் கடைகளுக்கு செல்வதில் ஏற்படும் அலைச்சல் மிச்சமாகும். மேலும் இந்த புதிய எஸ்எம்எஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தகவலை சிவில் சப்ளை துணை ஆணையர் சண்முகவேல் தெரிவித்துள்ளார்.