தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் அட்டைகளுக்கு 2,89,591 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதனை பரிசளித்து 1.22 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 80,050 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 99,300 ரேஷன் அட்டைகள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 68,291 பேருக்கு விரைவில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.