இன்றைய காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் முதியவர் வரை என அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகள், பேருந்துகள் போன்ற இடத்தில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மீது போக்சோ புகார்கள் பதிவு செய்யப்பட்டால் அவர்கள் நான்கு நாட்களுக்குள் இடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இப்புகார்கள் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் முதற்கட்ட விசாரணையை மேற்கொள்வார். இது காவல்துறையினர் மேற்கொள்ளும் சட்ட விசாரணைக்கு இணையாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.