
தமிழ்நாடு போக்குவரத்து துறை ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தொழிலாளர் ஓய்வூதிய விதிகளின்படி, கடந்த 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள், இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் அனைவரின் ஆயுள் சான்றிதழும் ஒவ்வொரு ஆண்டு ஜனவரி மாதம் முதலில் சமர்ப்பிக்கப்படும்.
இந்த நிலையில் அவர்கள் அனைவரும் மூத்த குடிமக்கள் என்பதால் அவர்களது ஆயுள் சான்றிதழை அரசு கட்டுப்பாட்டின் கீழ் அந்தந்த பகுதியில் உள்ள இசேவை மையத்திலேயே சமர்ப்பிக்கலாம். இதைத்தொடர்ந்து வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையில் போக்குவரத்து துறையில் ஓய்வூதியம் பெறுவோர் ஆயுள் சான்றிதழை இசேவை மையத்திலேயே அல்லது பணிமனைகளில் நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
இசேவை மையத்தில் ஆயிள் சான்றிதழை சமர்ப்பிக்கும் போது கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள், ஓய்வூதிய ஆணை படிவம், வங்கி புத்தகம், ஆதார் அட்டை, புகைப்படம், செல்போன் எண் ஆகியவை எடுத்துச் சென்று, TNS103 என்ற இணைய முகப்பில் பதிவு செய்ய வேண்டும் என ஓய்வூதிய நிதி பொறுப்பாட்சி அறக்கட்டளை அறிவித்துள்ளது என கூறினார்.