
ஏதர் எனர்ஜி நிறுவனமானது நாட்டில் 450 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் புது வேரியன்ட்டான Ather 450Sஐ ரூ.1,29,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. Ather 450S-க்கான முன் பதிவு ஜூலை மாதம் துவங்கும். இந்த ஏதர் 450S எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது பர்ஃபார்மென்ஸ் சென்ட்ரிக் EV மொபிலிட்டியை கொண்டுவரும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக Ather எனர்ஜி கூறியுள்ளது.
இது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் S1 Air ஸ்கூட்டருக்கு போட்டியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. Ather-ன் 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 3.7 kWh பேட்டரி பேக் உடன் வரும். Ather 450S எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 3 kWh பேட்டரியுடன் வரும் என்று தெரிகிறது.
அதேபோன்று 450X 146 கி.மீ ரேஞ்சை கொண்டிருக்கும் நிலையில், Ather 450S ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 115 கிமீ தூரம் வரை போகும் எனவும் இது மணிக்கு 90 கிமீ வேகத்தில் செல்லும் எனவும் நிறுவனம் கூறியிருக்கிறது. இந்த புது மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் நாடு ழுவதும் உள்ள ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டோரில் புக்கிங் செய்துகொள்ளலாம்.