
ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் பெருமானின் தரிசனத்திற்காக தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் பொதுமக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்படுகிறது.
இது தொடர்பாக இன்று முதல் ஜூன் 15ஆம் தேதி வரை தரிசனம் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு பரிந்துரை கடிதங்கள் செல்லாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து விஐபி பிரேக் தரிசனம் விஐபி பக்தர்களுக்கு வழக்கம் போல் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது. மேலும் இன்று முதல் காலை 6:00 மணிக்கு விஐபி தரிசனத்தை அனுமதிக்கலாம் எனவும் கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.