பிரபல நடிகரான மயில்சாமி கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை மாரடைப்பால் இறந்த செய்தி தமிழ் சினிமாவை உலுக்கியது. இவர் அதிகாலை வரை கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோவிலில் மகாராத்திரியை முன்னிட்டு கண்விழித்து வழிபாடு செய்துள்ளார். பின் திடீரென மரணமடைந்த சம்பவம் ஒட்டு மொத்த சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவர் சென்னை சாலிகிராமத்தில் மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். நடிகர் மயில்சாமி பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். இவரின் மறைவு பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இவர் இம்மண்ணை விட்டு போய் 3 நாட்கள் ஆகிய நிலையில், இந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வருவதாக பிரபல நடிகரான நெப்போலியன் தெரிவித்துள்ளார். மேலும் நெருங்கிய நண்பரான மயில்சாமியின் இறப்பு குறித்து தனது சமுக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.