இந்தியாவில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி தசரா கொண்டாட்டங்களுடன் நிறைவு பெறுகிறது. நவராத்திரி தினங்களில் துர்கா தேவியை பல்வேறு அவதாரங்களில் கண்டு ரசிக்கலாம். துர்கா தேவி மனித குலத்தின் நல்லனுக்காக பல்வேறு அவதாரங்களை எடுத்தார். நவராத்திரியின் போது துர்கா தேவியை வழிபட்டால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்து காணப்படும்.

இந்தியாவில் நவராத்திரி விழா கோலாலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வரும். அதில் சைத்ர நவராத்திரி, மற்றொன்று ஷரதிய நவராத்திரி, இரண்டு குப்தா நவராத்திரிகள். நவராத்திரியின் போது துர்க்கையின் 9 வடிவங்களும் வழிபடப்படுகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுகிறோம்.

ஒன்பது நாட்களும் வீடுகளில் கொலு பண்டிகை கொண்டாடப்படுகிறது. வீட்டில் கொலு வைத்து நெய்வேத்தியம் படைத்து அம்மனை வழிபட வேண்டும். நவராத்திரியின் முதல் நாளில் பக்தர்கள் சூரிய உதயத்திற்கு முன்பே அதிகாலையில் எழுந்து நீராடி தியானம் செய்து 9 நாட்களும் விரதம் இருக்க வேண்டும். இதனையடுத்து சுப நேரத்தில் புராணங்களின்படி கலசத்தை ஸ்தாபித்து வழிபட வேண்டும்.

துர்க்கை அம்மனுக்கு பழங்கள், மலர்கள் போன்றவற்றை சமர்ப்பித்து மந்திர ஸ்லோகங்கள் சொல்லி வழிபடுதல் மிகவும் நல்லது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் பராசக்தி ஒவ்வொரு அவதாரத்தில் காட்சி அளிக்கிறார். கோயில்களில் வண்ணமயமான, வித்தியாசமான கொலு வைத்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் எட்டாம் நாளாக இன்று அம்பிகையை வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி எந்த பிரச்சனை இருந்தாலும் அதனை எதிர்கொள்ளும் தைரியம் வரும்.