
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்பே நடிகர் ஜெய்யை அஞ்சலி காதலிப்பதாக பேசப்பட்டது. எனினும் அதனை அவர் மறுத்தார். அதன்பின் பிரபல டைரக்டர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக பேசினர். இத்தகவலில் உண்மை இல்லை என அஞ்சலி கண்டித்தார். இப்போது மீண்டும் திருமண பேச்சு கிளம்பி இருக்கிறது.
அதாவது, அஞ்சலியின் பெற்றோர் மாப்பிள்ளையை பார்த்து முடிவு செய்திருப்பதாகவும், அவரை திருமணம் செய்துக்கொள்ள அஞ்சலி சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் பேசப்படுகிறது. இருந்தாலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இப்போது ராம்சரணுடன் ஷங்கர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அஞ்சலி நடித்து வருகிறார். இதன் சூட்டிங் முடிந்ததும் திருமணம் நடக்கும் என சொல்லப்படுகிறது.