நடிகர் ஜீவா பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதையடுத்து ஜீவா தன் திறமையால் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து இப்போது தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகராக இருந்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல் மல்டி ஸ்டாரர் திரைப்படங்களிலும் அவர் அதிகமாக நடித்து வருகிறார். ஜீவா திரையுலகிற்கு நடிக்க வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.

இப்போது ஜீவாவுக்கு 90 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து உள்ளது. இவரின் வீடு சென்னை ஈசிஆரில் உள்ளது. 10 கோடி ரூபாய் செலவில் தான் 10 ஆண்டுகளுக்கு முன் ஜீவா வீட்டை கட்டினார். அதன் மார்க்கெட் மதிப்பு இப்போது இன்னும் பல மடங்கு உயர்ந்திருக்கும் என சொல்லப்படுகிறது. அதோடு அவர் பல சொகுசு கார்களை வாங்கி வைத்திருக்கிறார். பொதுவாக செடான் கார்களை விடவும் SUV ரக கார்களை வாங்க ஆர்வம் காட்டுவார் ஜீவா. Chevrolet Captiva, Ford Endeavour ஆகிய கார்கள் மட்டுமின்றி மேலும் சில சொகுசு கார்களையும் ஜீவா வைத்திருக்கிறார்.