தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அடடே சுந்தரா திரைப்படத்தின் வெற்றியை அடுத்து இப்போது “தசரா” படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை டைரக்டர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க, நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அதோடு பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய்குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உட்பட பலர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக சுதாகர் செருக்குரி தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாரயணன் இசை அமைத்துள்ளார். அண்மையில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் தசரா திரைப்படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இப்படத்தின் டீசர் வரும் 30ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்து உள்ளது. இந்த வீடியோவை நானி தனது சமூகவலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார்.