நாடு முழுவதும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் சூழ்நிலையில், குற்றங்களும் அதிகரித்த வண்ணம் இருகிறது. அதன்படி ஐநாவின் கண்காணிப்பு பிரிவான சர்வதேச போதை பொருள் கடத்தல் கட்டுப்பாடு வாரியம் வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா சார்பாக சட்ட விரோதமாக போதை மாத்திரைகளை தயாரிப்பதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக குறிப்பிட்டு உள்ளது.

அதோடு போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் ஆன்லைன் மற்றும் கடல் வாயிலாக கடத்தி வரும் நிலையில், கடந்த 5 வருடங்களில் போதை பொருள் பறிமுதல் அதிகரித்து இருப்பதாக தெரிவித்து உள்ளது. மேலும் கடந்த 2017ம் வருடம் முதல் 2022ம் ஆண்டு வரை ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் 2,146 கிலோவில் இருந்து 7,282 கிலோவாக அதிகரித்து இருக்கிறது.

அதிலும் குறிப்பாக இப்போதை பொருள்கள் அரபி கடல் வழியே கடத்துவது அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவில் பல கெமிக்கல், மருந்து தயார் செய்யும் நிறுவனங்கள் உள்ளதால் அங்கே சட்ட விரோதமாக போதை மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.