நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. நாடு முழுவதும் சென்ற 3 மாதங்களில் மட்டும் சுமார் 90 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதில் கர்நாடகாவில் 26 பேருக்கு H3N2 வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கடந்த 6ம் தேதி தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரையிலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும்படி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதோடு போதிய அளவில் மருந்துகளை கையிருப்பில் வைத்துக்கொள்ளுமாறு அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.