டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார். கடந்த திங்கட்கிழமை நடப்பாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல்வர் ஆளுநரை கடுமையாக சாடினார். அதாவது யூனியன் பிரதேசம் என்பதால் அனைத்துக்கும் ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது கட்டாயம் என்பதால் ஆளும் அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தொடர்ந்து கட்சியினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தின் போது ஆளும் கட்சி எம்எல்ஏ மகேந்தர் கோயல் தன்னுடைய உயிருக்கு அச்சறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு வேண்டும் எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவர் தனக்கு லஞ்சமாக வழங்கப்பட்ட பணத்தை சட்டப்பேரவையில் காண்பித்து, அரசு மருத்துவமனையில் ஒரு தனியார் ஒப்பந்ததாரர் தனக்கு லஞ்சம் கொடுக்கமுயற்சி செய்ததாக கூறினார். அதன் பிறகு டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் அமைந்துள்ள பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனையில் தான் ஊழியர்களை பணியமத்துவதில் முறைகேடுகள் நடந்ததாகவும் இது பற்றி கூறியதற்காக தன்னை அமைதிப்படுத்துவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் இந்த விவகாரத்தில் ஒரு பெரிய தலை ஈடுபட்டுள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுனார். மேலும் சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் இந்த விவகாரம் தீவிரமானது என்றும், மன்றத்தின் புகார்கள் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறினார்.