
உத்திரபிரதேச மாநிலத்தில் தற்போது ஒரு வினோதமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. அதாவது ஒரு தம்பதிக்கு திருமணம் ஆகி 40 நாட்கள் ஆகிறது. இந்நிலையில் திருமணம் ஆகி 40 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் புதுப்பெண் தனக்கு விவாகரத்து வேணும் எனக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது தன்னுடைய கணவர் தினமும் குளிப்பதில்லை என்றும் அதனால் அவருடைய உடலில் இருந்து வரும் துர்நாற்றத்தை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை எனவும் எனக்கு அவரிடம் இருந்து விவாகரத்து வாங்கி கொடுத்து விடுங்கள் எனவும் இளம் பெண் தன் மனுவில் தெரிவித்துள்ளார். இவருடைய கணவர் பெயர் ராஜேஷ்.
இவர் மாதத்திற்கு 1 அல்லது 2 முறை மட்டும்தான் குளிப்பாராம். பின்னர் வாரத்திற்கு ஒருமுறை கங்கை நீரை தலையில் தெளித்துக் கொண்டு தான் புனிதமாகி விட்டதாக அவர் கூறுகிறாராம். வாரத்திற்கு ஒரு முறை கங்கநீரை தலையில் மட்டும் தெளித்துக் கொண்டு தான் புனிதம் ஆகிவிட்டதாக கணவர் நம்புவது மிகுந்த வேதனையை அளிப்பதாக இருப்பதாக இளம்பெண் கூறுகிறார். திருமணம் ஆகி 40 நாட்கள் ஆகும் நிலையில் இதுவரை தன்னுடைய கணவர் ராஜேஷ் 2 முறை மட்டும்தான் குளித்துள்ளார் என்று கூறியுள்ளார். மேலும் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கணவன் மனைவி இருவருக்கும் கவுன்சிலிங் கொடுக்குமாறு அறிவுரை வழங்கி மனநல ஆலோசனைக்காக அனுப்பி வைத்துள்ளது