சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தானிபூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், டிஜே பாடல் விவகாரம் பெரும் தகராறாக மாறியிருக்கிறது. திருமணத்தில் மணப்பெண் மேடைக்கு வரும்போது, தானே விரும்பிய பாடல் ஒலிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், மாப்பிள்ளை தரப்பு தங்களுக்குப் பிடித்த பாடல்களை மட்டுமே ஒளிபரப்பியது. இதனால் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு பிறகு, குடும்பத் தலைவர்கள் சமரசமாகி திருமணம் நடந்து முடிந்தது. எனினும், மாப்பிள்ளை தரப்பில் வந்த விருந்தினரொருவர், ஆத்திரத்தில் பெண் வீட்டாரின் நெருங்கிய நண்பரை வாகனத்தில் வீட்டுக்கு திரும்பும்போது வழிமறித்து கத்தியால் குத்தியுள்ளார்.

கழுத்தில் படுகாயம் அடைந்த அந்த நபர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த கொடூரச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்கு காரணமான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.