
மும்பை மீராரோடு பகுதியில் நதீம் அகமத் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி அம்ரீன் கான். இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர். அம்ரீன் பாந்த்ரா, தனது குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்காலிகமாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த அம்ரீன், குழந்தைகளை தன் பொறுப்பில் ஒப்படைக்க கோரி வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்றம் குழந்தைகளை அம்ரீனிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
கோர்ட்டு உத்தரவின்படி, அம்ரீன் பாந்த்ரா, தனது கணவரிடம் இருந்து குழந்தைகளை அழைத்து செல்ல வந்து, வீட்டை பூட்டிய நிலையில் கண்டார். அப்போது பக்கத்து வீட்டினரிடம் விசாரித்தபோது, உறுதியாக எதுவும் தெரியவில்லை. அதே நேரம் வீட்டிற்கு வந்த நதீம் அகமத், குழந்தைகள் பாட்டியுடன் சென்றுள்ளதாக கூறினார். இதனை தொடர்ந்து சந்தேகமடைந்த அம்ரீன் தனது மகள் படிக்கும் பள்ளியைத் தேடிச் சென்றார்.
அங்கே, கத்தியோடு சுற்றிக்கொண்டிருந்த நதீம் அகமத், அம்ரீனை பார்த்தவுடன் கோபமடைந்தார். இருவரும் நடுரோட்டில் வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் நதீம் அகமத் கத்தியால் அம்ரீனை குத்திச் சாய்த்து, அவருடைய கழுத்தை அறுத்துவிட்டார். இதனால் சம்பவ இடத்திலேயே அம்ரீன் இறந்து விட்டார். நதீம் அகமத், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, அப்பகுதி மக்கள் அவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த கொடூர சம்பவம், பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்தது.