ஓடிடி தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சொல்கிறது. இந்நிலையில் பல ஓடிடி தளங்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு புது புது திரைப்படங்களை போட்டி போட்டு வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் 2023-ஆம் ஆண்டு ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்.
துணிவு
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் முதலிடத்தில் உள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், அமீர், பாவணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வங்கியில் நடக்கும் மோசடி குறித்து இந்த படம் விரிவாக எடுத்துக் கூறுகிறது. பொங்கலுக்கு தியேட்டரில் வெளியான துணிவு திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. அதன் பிறகும் ஓடிவிடு தளத்தில் 2.5 கோடி பேர் துணிவு படத்தை பார்த்துள்ளனர்.
வாத்தி
தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியானது. கலவையான விமர்சனத்தை பெற்று வாத்தி திரைப்படம் நல்ல வசூல் பெற்றது. மேலும் ஓடிடி தளத்தில் வாத்தி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
கட்டா குஸ்தி
கணவன் மனைவி இருவரும் ஈகோ இல்லாமல் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கட்டா குஷி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஓடிடி தளத்தில் அதிகமான பார்வையாளர்களை பெற்ற மூன்றாவது திரைப்படம் இதுவாகும்.
டி.எஸ்.பி
பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான டிஎஸ்பி திரைப்படத்தில் பிரபாகர், புகழ், இளவரசி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார் இந்நிலையில் ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்களின் வரிசையில் இந்த படம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
ராங்கி
எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் வெளியான ராங்கி திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்தது. ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் ராங்கி படம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.