நாட்டின் தலைநகரமான டெல்லியில், திருடர்களின் செயல்பாடுகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதைக் காட்டும் புதிய சிசிடிவி காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. டிடிசி (DTC) பேருந்தில் பதிவான இந்த வீடியோவில், ஒரு திருடர்கள் கும்பல் திட்டமிட்ட முறையில் ஒரு நபரின் மொபைலை திருடும் நிகழ்வு பதிவாகியுள்ளது. அந்த சம்பவத்தில், அந்த நபருக்கே தன்னுடைய மொபைல் போன் திருடப்படுவதைப் பற்றிய எந்த அறிவும் இருக்கவில்லை என்பது பெரும் அதிர்ச்சி.

வீடியோவில், ஒரே பேருந்தில் குழுவாக பயணிக்கும் பிக்பாக்கெட் கும்பல், தங்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவியுடன் செயலில் இறங்குக்கின்றனர். அவர்கள் முதலில் அந்த நபருக்கு இடையில் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள். பின்னர், ஒருவர் அவரை தள்ளும்போது, மற்றொருவர் ரகசியமாக அவரது மொபைலை எடுத்து விடுகிறார்.

இது மிகச் சரியாக திட்டமிட்ட படி, வேகமாக நடப்பதால், அருகில் இருந்த பயணிகளுக்கும், பேருந்து ஓட்டுநருக்கும் சந்தேகமே ஏற்படவில்லை. இந்த வீடியோவைக் கண்ட மக்கள், “பேருந்து பயணங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” எனக் கூறி வருகின்றனர்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, தற்போது 5 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் பலர், இந்த திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.

இது போன்று பொது இடங்களில்  குற்றச்செயல்களில் குழுவாக செயல்படும்  திருடர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளதோடு, பொதுமக்கள் அனைவரும் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தில் மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.