தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடற்பயிற்சியாளராக வளம் வருகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்திருந்தார்.  இதற்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் எடப்பாடி சொன்னதில் தவறில்லை. அவர் உண்மையை சொன்னதற்கு நன்றி. நான் அதிகாலை காலை 4 மணிக்கு தொடங்கி 6 மணிக்கு எனது உடற்பயிற்சியை முடிக்கின்றேன்.

உலகத்திலேயே ஜப்பான் தலைநகரில் தான் எட்டு கிலோமீட்டர் தூரத்துக்கான நடை பாதை ஒன்று ”ஹெல்த் வாக்” என்கின்ற பெயரில் இருந்து கொண்டிருக்கிறது. நாம் நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருக்கிறோம்… தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும் 8 கிலோமீட்டர் தூரத்திற்கான நடைபாதையை ஏற்படுத்துவோம் என்று சொல்லி இருக்கிறோம். அதே போல 38 மாவட்டங்கள்  நடை பாதையை அமைத்துக் கொண்டிருக்கிறோம்.

அனைத்து மாவட்டங்களிலும் இதை அமைப்பதற்கான சாத்தியம் உள்ளதா ? என்ற வகையில் நான் ஆய்வு மேற்கொள்ளவும் இந்த நடை பயிற்சியை பார்க்கின்றேன்.  அந்த வகையில் இப்போது நான் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும்…  அதிகாலை 5 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் அந்த எட்டு கிலோமீட்டரை…. சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்,  மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர்களை அழைத்துச் சென்று…

அந்தப் பாதையில் இரு பக்கமும் மரங்கள் நடப்பட வேண்டிய அவசியம் குறித்தும்,  இருக்கையில் அமைக்கப்பட வேண்டிய அவசியம் குறித்தும், 4 மணிக்கு நான் எழுந்து எதிர்காலத்தில் நோய் நொடி இல்லாமல் மக்கள் இருக்க நடப்பது ஒரு சரியான உடற்பயிற்சி என்கின்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது என தெரிவித்தார்.