தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது என்றும் தன் குரலில் வேறு யாரோ அப்படி பேசி இருக்கிறார்கள் என்றும் நிதியமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் பாஜக அண்ணாமலை நிதியமைச்சர் பேசியதாக வெளியான ஆடியோ ஜோடிக்கப்பட்டது இல்லை. முதல்வர் ஸ்டாலினின் மகன் மற்றும் மருமகன் ரூபாய் 30 ஆயிரம் கோடி சம்பாதித்ததாக அவர் பேசியுள்ளார். இந்த ஆடியோவை சுதந்திரமான தடவியல் சோதனைக்கு உட்படுத்துமாறு ஆளுநர் ‌ ரவியை பாஜகவின் உயர்மட்ட குழு இன்று சந்தித்து கோரிக்கை விடுக்க இருக்கிறது.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் யார் குரலில் யார் வேண்டுமானாலும் பேசி இப்படி ஆடியோ வெளியிடலாம் என்று கூறியுள்ளார். அவர் என்னுடைய குரலில் ஒரு போலியான ஆடியோவை தயாரித்து வெளியிடட்டும். அந்தத் ஆடியோவில் பேசியது போன்ற நானும் என் குரலில் பேசி ஆடியோ வெளியிடுகிறேன். இருவரும் நீதிமன்றத்திற்கு செல்வோம். அப்போது அது எவ்வளவு பெரிய பிரச்சனை என்பது தெரியவரும். நிதியமைச்சர் சொல்வதை அவருடைய கட்சியினர் வேண்டுமானால் நம்பலாம். ஆனால் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார். மேலும் ஆடியோ விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது