அண்மையில் நடந்து முடிந்த 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவிலிருந்து சென்ற ஆர்.ஆர்.ஆர் படமும், எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்ற டாக்குமெண்ட்ரி படமும் தலா ஒரு விருதை பெற்றது. இதில் தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் படத்துக்கான விருதை பெற்ற அப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கொன்சால்வேஸ் விழா மேடையில் பேசினார்.

எனினும் அந்த படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்காவிடம் மைக் இருந்தும் அவரை பே விடாமல் மைக் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அவர் பேச முயற்சி செய்தும் மைக் வேலை செய்யாததால் அப்செட் ஆனார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுகுறித்து தன் வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கும் குனீத் மோங்கா “ஆஸ்கர் விழா மேடையில் பேசுவதற்காக முன்கூட்டியே என்னை தயார்படுத்தி வைத்திருந்தேன்.

விருதை பெற்றதும் இந்தியாவிலிருந்து முதல் முறையாக ஒரு இந்திய படத்திற்கு கிடைத்துள்ள விருது இது தான் என்று பேசவேண்டும் என நான் நினைத்திருந்தேன். இருந்தாலும் எனக்கு பேச வாய்ப்பு அளிக்காமல் தன் வசமிருந்த மைக் அணைக்கப்பட்டது. எனினும் நான் மீண்டும் அதே ஆஸ்கர் விழா மேடைக்கு சென்று பேச நினைத்ததை பேசுவேன்” என்று கூறியுள்ளார்.