
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் த்ரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படம் அக்டோபர் 19-ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் லியோ படப்படிப்பில் தற்போது நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளார். மும்பை ஏர்போர்ட்டில் இருந்து சஞ்சய் தத் காஷ்மீருக்கு சென்ற புகைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது படப்பிடிப்பு தளத்தில் சஞ்சய் தத் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் சஞ்சய் தத், விஜய் உட்பட படக்குழுவினருக்கு கை கொடுக்க அதன் பிறகு அனைவரும் சேர்ந்து காபி குடிக்கிறார்கள். எக்ஸ்க்ளுசிஸிவ் வீடியோ வேணும்னு நீங்க கேட்டீங்கலாமே. அது எங்களுக்கு கேட்டிடுச்சு என்று படக்குழுவினர் பதிவிட்டு தற்போது இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். மேலும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தற்போது லியோ படக்குழு வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது
Roll out the red carpet
@duttsanjay sir has arrived in style to set the screen on fire
Exclusive video venum nu keteengalame, engaluku keturchu
#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss#LEO
pic.twitter.com/A0Ea1dqZVj
— Seven Screen Studio (@7screenstudio) March 11, 2023