
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களுக்கென “மெகா பெட் ஷோ” ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 5,000 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் 500க்கும் மேற்பட்ட நாய்கள் மற்றும் 100 பூனைகள் கலந்து கொண்டன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான செல்லப்பிராணி வைத்திருப்பவர்கள் கலந்துகொண்டனர்.
தங்களது செல்லப் பிராணிகளுக்கு விதவிதமான அலங்காரம் செய்து அழைத்து வந்திருந்தனர். மேலும் ஒவ்வொரு நாயும், பூனையும் தங்களது தனி திறமைகளை வெளிக்காட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது மற்றும் பராமரிப்பது அவற்றிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.