
முன்னதாக கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழ்நாட்டை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளதாக தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த 2014 ஆம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை 2025 ஆம் ஆண்டு 181.77 லட்சம் கோடியாக மாறியிருக்கிறது. அப்படி என்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பி கேட்கலாமா? என்று அண்ணாமலைக்கு அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.