மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்து அதற்குரிய அறிவிப்பை பெற்றதையடுத்து, தற்போது 8வது ஊதியக்குழு குறித்து மற்றொரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதன்படி 8வது ஊதியக் குழுவின் வாயிலாக அரசு ஊழியர்களின் சம்பளமானது அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இப்போது அரசு 8-வது ஊதியக்குழு பற்றி பரிசீலனை செய்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது.

மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதிய வரம்பு ரூபாய்.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 7-வது ஊதியக் குழுவில் பிட்மென்ட் காரணி 2.57 மடங்கு இருந்த நிலையில், சம்பளம் 14.29% அதிகரித்து குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக இருக்கிறது. தற்போது 8வது ஊதியக்குழுவில் 3.68 மடங்கு ஃபிட்மென்ட் காரணியும், சம்பளம் 44.44% அதிகரித்தால் குறைந்தபட்ச சம்பளம் ரூ.26,000 ஆக இருக்க வாய்ப்பு இருக்கிறது.