நடப்பு ஆண்டு தொடக்கத்தில் தளபதி விஜய் வாரிசு என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார். இதையடுத்து தற்போது “லியோ” படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் 2வது முறையாக லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து லியோ எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கான முதற்கட்ட சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்ற நிலையில், தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதனிடையே தளபதி விஜய் எப்போதும் அமைதியாக கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்ட நடிகர் என கேள்விப் பட்டிருக்கிறோம். பட நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் விஜய் அமைதியாகவே இருப்பார்.

ஆனால் தற்போது அப்படி இல்லையாம், படப்பிடிப்பின்போது அனைவரிடமும் ஜாலியாக பேசுவது, கலாய்ப்பது என மகிழ்ச்சியாக இருக்கிறாராம் விஜய். இப்போது லியோ சூட்டிங்கில் மன்சூர் அலிகானுடன் சேர்ந்து விஜய் செம கலாட்டா செய்வதாக சொல்லப்படுகிறது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகே விஜய் இப்படி மாறி விட்டதாக கூறுகின்றனர்.