தேனி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் நேற்று கூட்டம் அலைமோதியது. நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து சாமியே வழிபடுவார்கள். இன்று துவாதசி திருநாள் என்பதால் காய்கறிகளை வாங்க உழவர் சந்தையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்நிலையில் உழவர் சந்தைக்குள் இருக்கும் ஒரு வளாகத்தில் மட்டும் நேற்று 30 லட்சம் ரூபாய்க்கு 33 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் உழவர் சந்தையில் ஒட்டுமொத்த வளாகத்தில் 60 லட்சம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.