Samsung Galaxy M34 5G போன் மேம்பட்ட குறைந்த-ஒளி புகைப்படம் எடுக்கும் அம்சங்கள் உடன் 50MP கேமராவை வழங்குகிறது. அதோடு பயணத்தின் போது நிலையான வீடியோக்களுக்கான சூப்பர் ஸ்டேடி OIS வன்பொருளை வழங்குகிறது. இதனிடையே சாம்சங் இந்தியாவில் Samsung Galaxy M34 5G-ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

இது ஜூலை மாதம் தொடக்கத்தில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் துறை ஆதாரங்களின் அடிப்படையில் இந்த இடைப்பட்ட ஸ்மார்ட் போன் சக்தி வாய்ந்த 50MP கேமரா மற்றும் உயர் புதுப்பிப்பு விகிதம் 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும். இது ரூ.20,000-க்குள் இருக்கும் என சொல்லப்படுகிறது. போட்டோ எடுக்கும் திறன்களைப பொறுத்தவரையிலும் சாதனம் 50MP கேமராவை கொண்டிருக்கும்.

மேலும் இது சூப்பர் ஸ்டேடி OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) வன் பொருளைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயனாளர்கள் நகரும் போது கூட சிறந்த வீடியோக்களை பிடிக்க உதவுகிறது. இதுதவிர Galaxy M34 5G போன் 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இவை ஒரு மென்மையான மற்றும் அதிவேகமான காட்சி அனுபவத்தினை உறுதிசெய்கிறது. இந்த ஆற்றல் தீவிர அம்சங்களை ஆதரிக்க, ஸ்மார்ட் போன் ஒரு பிரிவில் முன்னணி 6000 mAh பேட்டரி உடன் வரக்கூடும். இது நீண்டகால பயன்பாட்டை உறுதிசெய்கிறது.