முதல்முறையாக லித்தியம் பேட்டரியை வடிவமைத்து தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஜான் குட் இனஃப் இன்று காலமானார். இவருக்கு வயது 100. கடந்த 2019 ஆம் ஆண்டு வேதியியல் துறையில் நோபல் பரிசை அவர் பகிர்ந்து கொண்டார். நாம் பயன்படுத்தி வரும் போன் தொடங்கி லேப்டாப், பேஸ் மேக்கர், மின் வாகனங்கள் என பலவற்றிலும் லித்தியம் அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. தொழில்நுட்பத்தில் பல சாதனைகளைப் படைத்த நாயகனின் சரித்திரம் தற்போது முடிந்துள்ளது. இவரின் மறைவிற்கு பலரும் நிறங்கள் தெரிவித்து வருகின்றனர்.