சமீபத்தில் பேருந்து ஓட்டுனர் பணியை துறந்த கோவை சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளாவுக்கு நடிகர் கமல்ஹாசன் பண்பாட்டு மையம் சார்பில் புதிய கார் ஒன்றை பரிசாக வழங்கினார். அவர், ” ஷர்மிளா ஒரு ஓட்டுனராக மட்டுமே இருந்து விட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவர் என்பதே என் நம்பிக்கை. இதனையடுத்து வாடகை கார் ஓட்டும் தொழில் முனைவராக தனது பயணத்தை மீண்டும் ஷர்மிளா தொடரவிருக்கிறார்” என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்நிலையில் கோவை சட்டமன்ற தேர்தலில் தோற்ற கமல், மக்களவை தேர்தலில் கோவை தொகுதியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக திமுக கூட்டணியில் மநீம சேர வாய்ப்புள்ளதாகவும், தேர்தல் பணிகளில் கோவையில் மநீம கட்சியினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதன் ஒரு பகுதியாகவே, கோவை மக்களின் கவனத்தை கவர, வேலையை விட்ட பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமல் கார் பரிசாக தந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது