அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்து சென்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் அடைப்பு இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அறுவை சிகிச்சை முடிந்து செந்தில் பாலாஜி நல்ல முறையில் தேறி வருகிறார் என்று காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜியால் மெல்ல பேச முடிகிறது. ஆனால், இன்னும் எழுந்து இயல்பாக நடமாடவில்லை.

செந்தில் பாலாஜி தனி அறையில் 20 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை எடுக்க வேண்டும். நீதிமன்ற காவலில் இருப்பதால் அவரது தம்பி அசோக் உட்பட குடும்ப உறுப்பினர்கள் யாரும் பார்க்கவில்லை என தெரிவித்துள்ளதுஇந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஆபரேஷனே நடக்கலைனு பலர் சொல்றாங்க. அது நடந்துச்சா இல்லையானு யாருக்குமே தெரியலை. அமலாக்கத்துறை அதனை தெளிவுபடுத்த வேண்டும்” என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த ஆட்சியில் லஞ்சம், ஊழல் தலை விரித்து ஆடுவதாகவும் காங்கிரஸ் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணியில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருப்பதாகவும் கூறினார்