மலையாள சினிமாவில் 2024ம் ஆண்டில் மட்டும் 600 முதல் 700 கோடி வரை இழப்பை சந்தித்து உள்ளதாக கேரளா திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தி குறிப்பை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியிருந்ததாவது, இந்த ஆண்டு 5 ரீ-ரிலீஸ் உட்பட 24 படங்கள் வெளியானது. இதற்கு மொத்தம் 1000 கோடி செலவானது. ஆனால் இதில் 26 படங்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால் 350 கோடி லாபம் கிடைத்தது. மீதமுள்ள படங்கள் திரையரங்குகளில் சரியாக ஓடவில்லை. இதன் காரணமாக 650 முதல் 700 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தோம். இருப்பினும் அவர்கள் அதை விரும்பவில்லை. இது இப்படியே தொடர்ந்தால் திரைப்படத்துறை பெரும் இழப்பை சந்திக்கும் என்றும் தெரிவித்துள்ளது.