மகாராஷ்டிரா மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 27-ம் தேதி தொடங்கிய நிலையில் மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறும். மராட்டிய மாநில ஆளுநர் ரமேஷ் பயஸ் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது ஆளுநர் கூறியதாவது, மராட்டிய அரசு 2022-23 ஆம் நிதியாண்டில் 600 வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு 1 லட்சத்து 25 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக 45 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு ரூ. 87,774 கோடி முதலீட்டை ஈர்க்க 24 திட்டங்களை அங்கீகரித்துள்ளது.
இதன் மூலம் 61 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். கடந்த மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் அரசு 19 நிறுவனங்களுடன் 1.37 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டுள்ளது. சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் துணைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ. 10,000 ஓய்வூதியம் 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பிரதம மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 4,85,000 இளைஞர்கள் மற்றும் 2,81,000 விவசாயிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன்பிறகு ஆண்டு திட்டத்திற்காக ரூ. 1,50,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பவார் கூறினார். அதன் பிறகு பட்ஜெட் மதிப்பீட்டின் படி வருவாய் வரவுகள் ரூ. 4,03,427 கோடியாகவும், வருவாய் செலவு ரூ. 4,27,780 கோடியாகவும் இருக்கும். இதனால் ரூ. 24,353 கோடி வருவாய் இழப்பீடு ஏற்படும் என்று கூறினார். மேலும் பட்ஜெட் தாக்களின் போது பல்வேறு விதமான சிறப்பு அறிவிப்புகளையும் அஜித் பவார் வெளியிட்டார்.