சர்ச்சைக்குரிய பேச்சாளர் மகா விஷ்ணு சென்னை விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சமீபத்தில் ஒரு அரசுப் பள்ளியில் நிகழ்த்திய பேச்சில் மூடநம்பிக்கை தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருந்தார். இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் மீது பல்வேறு புகார்கள் பதிவாகின.

இந்த சூழலில், வெளிநாட்டிலிருந்து திரும்பிய மகா விஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். மகா விஷ்ணுவின் கைது, சமூக வலைதளங்களில் பெரும் பொருளான நிலையில் அது குறித்த சில மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த மந்திரம் சொன்னால் மழையடிக்கும் இந்த மந்திரம் சொன்னால் புயலடிக்கும். இப்போ எந்த மந்திரம் சொன்னால் விடுதலை கிடைக்கும் சாரே என மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.