மகளிர் டி20 உலக கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இதன் இறுதி போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியாவும், முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு வந்த தென்னாபிரிக்க அணிகளும் மோதியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்ற நிலையில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 156 ரன்கள் எடுத்த நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 6-வது முறையாக டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லானிங் 5-வது ஐசிசி கோப்பையை வென்றுள்ளார். இதன் மூலம் 4 ஐசிசி கோப்பையை வென்ற ரிக்கி பாண்டிங் மற்றும் 3 ஐசிசி கோப்பைகளை வென்ற எம்.எஸ் தோனி ஆகியோரின் சாதனைகளை மெக் லானிங் முறியடித்துள்ளார். மேலும் அதிக ஐசிசி கோப்பைகளை வென்ற கேப்டன் என்ற பெருமையையும் மெக் லானிங் பெற்றுள்ளார்.