பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியதாவது, கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மோடிக்காக பிரச்சாரம் செய்ததற்கு தற்போது பரிகாரம் தேடுகிறேன். மோடி மிகப்பெரிய பொய்யராக மாறி உள்ளார். அதாவது வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை ஆட்சி அமைத்த பின் 15 நாட்களிலேயே திரும்பக் கொண்டு வருவேன் என்பதே மிகப்பெரிய சான்று. பல இடங்களில் மோடியையும் அமித்ஷாவையும் தாக்கி சுப்பிரமணிய சுவாமி பேசியுள்ளார்.

இவருக்கு எதிராக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெற்றி பெற்ற பின் மூன்றாவதாக பிரதமர் மோடி இடம்தான் பேசினார் என பெருமையாக கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த சுப்பிரமணிய சுவாமி மூன்றாவதாக தான் பேசியுள்ளார். அப்போது முதல் இரண்டு இடங்களில் யாரிடம் பேசி உள்ளார். விரைவில் டிரம்ப் ஷூ துடைக்கும் வாய்ப்பு மோடிக்கு கிடைத்துள்ளது என ஜெய்சங்கர் கூறுவார். இவ்வாறு மோடிக்கு எதிராக சுப்ரமணியசாமி பேசி வருவது சர்ச்சைக்கு உள்ளாகிறது