அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. அந்த தொடருக்கான மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ தயாராகி வருகிறது. மெகா ஏலம் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து அணிகளும் கலைக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஐபிஎல் தொடரின் போது ரோகித் சர்மா ஐந்து கோப்பைகளை கேப்டனாக இருந்து வென்று கொடுத்தார். ஆனால் மும்பை நிர்வாகம் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது.

இதனால் ரோகித் சர்மா மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த வருடம் ரோகித் சர்மா மும்பை அணியில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல்கள் உலா வருகிறது. இந்த நிலையில் லக்னோ அணி ரோகித் சர்மாவை ஏலத்தில் எடுக்க தயாராக இருப்பதாக அந்த அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஜாண்டி ரோட்ஸ் கூறியுள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது, ஐபிஎல் ஏலத்தில் ரோஹித் இடம் பெற்றால் அவரை லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்க ரெடியாக இருக்கிறோம். அவர் தலை சிறந்த வீரர் என்பதால் எந்த அணியாக இருந்தாலும் அவரை மகிழ்ச்சியாக எழுத்தில் எடுக்கும் என கூறியுள்ளார்.