
கவுகாத்தியில் நடிகர் மிருகங்கா, தனது காதலியுடன் சேர்ந்து நேற்று முன்தினம் ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இதையடுத்து 3 மணி நேரத்திற்கு பிறகு வெளியே சென்றனர். அதன் பின் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்திற்கு சென்ற மிருகங்கா, மர்ம நபர் ஒருவரால் கடுமையாக தாக்கி கொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மிருகங்கா ஒரு ஹோட்டலில் இருந்து நடுங்கியபடி வெளியே வந்தது தெரியவந்தது. அந்த விசாரணையில் ராஜு அலி என்பவர் கைது செய்யப்பட்டார். அதோடு அவர் பயன்படுத்திய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. இவரிடம் நடத்திய விசாரணையில் ராஜு அலி மிருகங்காவின் தலையில் கத்தியால் தாக்கி, பின்னர் பலமுறை அவரை குத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மிருகங்கா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மிருகங்காவை இரண்டு ஆண்டுகளாக தெரியும் என்றும், மிருகங்காவுடன் இருந்த பெண்ணிற்கும் ராஜூ அலிக்கும் முன்னதாக பழக்கம் இருந்ததாகவும் கூறப்பட்டது. அதனால் இந்த கொலை முக்கோண காதல் விவகாரம் தொடர்பாக அரங்கேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.