திமுக  தொண்டர்களிடம்  பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், மறைமுக வரி விதிப்பில சீர்திருத்தம் செய்ய எல்லா மாநில அரசுகளோடும் ஆலோசனை செய்வோம்னு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில சொன்னாங்க.கூடுதலா…  பிரதமர் மாநில அரசுகளுக்கு அதிக நிதி ஆதாரங்கள் வழங்குவோம்னு சொன்னாரு. ஆனால்  ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குகிற காலத்தை கூட நீட்டிக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு. மாநிலங்களோட பங்கையும் ஒழுங்கா கொடுக்குறது இல்ல. சுருக்கமா சொல்லணும்னா…  மாநிலங்களோட நிதி நிலைமை ஜி.எஸ்.டி. ஆல்  இப்போ ஐ.சி.யு.ல இருக்கு.

பன்னிரண்டாவது நிதி கமிஷனில இருந்து நிதி ஒதுக்கீடு குறைச்சத்தால…. கடந்த 19 ஆண்டுகளில் நம்ம தமிழ்நாட்டுக்கு சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டிருக்கு. அதுமட்டுமல்ல…  இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல தமிழ்நாட்டுக்கு இழப்பு ஏற்பட போகுது.

அதே மாதிரி கிராமப்புற ஏழை –  எளிய தாய்மார்களோட வாழ்வாதாரத்துக்கு உயிர் மூச்சா இருக்கிற 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்துக்கு நிதியை குறைச்சது மட்டும் இல்ல, வேலை செய்ற தாய்மார்களுக்கு சம்பளம் கூட ஒழுங்கா கொடுக்காம பா.ஜ.க. ஆட்சியில் இழுத்தடிக்கிறாங்க. இந்த நிலைமை தமிழ்நாட்டுக்கு மட்டும்ன்னு நினைக்காதீங்க. இதைக் கேட்டுகிட்டு இருக்கின்ற உங்க எல்லாரோட மாநிலத்துலயும் இதே தான் நிலைமை என தெரிவித்தார்.