
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேமானூர் பகுதியில் வசித்து வருபவர் புருஷோத்தமன். இவரது வீட்டின் சுற்றுச்சுவர் மீது லாரி மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்சியில், ஆற்றூர் அருகே உள்ள தேமானூர் பகுதியில் கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு கேரளாவிற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் அருகே இருந்த புருஷோத்தமன் வீட்டின் சுற்றுசுவர் மீது வேகமாக வந்து மோதியுள்ளது.
இதனால் அவரது வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து உள்ளே இருந்த இரண்டு பைக்குகளும் இடிபாடுகளில் சிக்கி சேதமடைந்தன. இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதன்பின் லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி சோதனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.