
கோலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி டைரக்டராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இப்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதனிடையில் லோகேஷ் கனகராஜ் பிரபல டைரக்டர் தங்கர் பச்சன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் “கருமேகங்கள் கலைகின்றன” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். இந்நிலையில் தங்கர்பச்சான் இயக்குனர் லோகேஷுக்கு பலாப் பழமும், முந்திரி பருப்பையும் பரிசாக வழங்கி இருக்கிறார்.
அது தன் தோட்டத்தில் விளைந்தது என்று தங்கர்பச்சான் கூறினார். இந்திய சினிமாவை திரும்ப பார்க்கக்கூடிய இயக்குனராக லோகேஷ் வலம் வருகிறார் என்றும் அது நம் அனைவருக்கும் பெருமை எனவும் பாராட்டியுள்ளார்.
தனது 'கருமேகங்கள் கலைகின்றன' பட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு பலாப்பழம், முந்திரி பருப்பை பரிசாக வழங்கிய இயக்குநர் தங்கர்பச்சான்!#LokeshKanagaraj | #KarumegangalKalaigindrana | #ThankarBachan | #Jackfruit | #CashewNuts pic.twitter.com/Q5TK8kNUex
— PTPrime (@pttvprime) May 7, 2023