அமெரிக்காவில் மூன்று வயது சிறுமியை ரயில் தண்டவாளத்தில் தள்ளி விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் ஓரிகான் ரயில் நிலையத்தில் மூன்று வயது சிறுமி ஒருவர் தனது தாயுடன் ரயில்வே பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு பெண் சிறுமியை பின்னால் இருந்து பலமாக ரயில்வே தண்டவாளத்தில் தள்ளி விட்டுள்ளார். அப்போது அங்கு இருந்தவர்கள் அடுத்த ரயில் வருவதற்குள் சிறுமியை பத்திரமாக மீட்டு இருந்தாலும் சிறுமியின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.