
தமிழக பாஜக நடத்தி வரும் எண் மண், எண் மக்கள் யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணண்மாலை, சனாதன தர்மத்தை பழித்தால் இந்து தர்மத்தை பழிக்கணும். இந்து தர்மத்தை பழித்தால், நம்முடைய கலாச்சாரத்தை பழிக்கணும். கலாச்சாரத்தை பழித்தால் நம்முடைய தாய்மார்களை பழிப்பது.. அப்படிப்பட்ட ஒரு மாபெரும் தவறை திமுக செய்திருக்கிறது. அதை செஞ்சுட்டு உதயநிதி ஸ்டாலின் என்னென்னமோ உளறாரு..
இன்னைக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் கொடுத்து இருக்காங்க. தமிழக அரசுக்கு ஒரு நோட்டீஸ்…. எதுக்கு ? சனாதன தர்மம் ஒழிப்பு மாநாட்டு நடத்துனதுல கலந்துக்கிட்டீங்க… உதயநிதி ஸ்டாலின் அவருக்கு ஒரு நோட்டீஸ். சுப்ரீம் கோர்ட் கொடுக்கும் அளவிற்கு தமிழகத்தில 400 இடத்துக்கு மேல பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் கம்ப்ளைன்ட் கொடுத்தும், பட்டத்து இளவரசர் மேல ஒரு கேஸ் கூட ரிஜிஸ்டர் பண்ணல.
ஆனால் நீங்க இதுக்கு நிச்சயமா தண்டனை கொடுப்பீங்க. 2024இல் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயமாக கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எப்படி சின்னப்பா தேவர் ஐயா அவர்கள்…. முருகப்பெருமானுக்கு துணை நின்றாரோ, அதேபோல பாரதிய பிரதமர் அவர்களுக்கு இங்க இருக்கக்கூடிய ஒரு ஒருவருமே துணை இருப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கு என தெரிவித்தார்.